அம்மோனியா கசிவால் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்குக: சட்டமன்றத்தில் திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தல்

சென்னை: அம்மோனியா கசிவால் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கு வேண்டும் என சட்டமன்றத்தில் திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார். மேலும் ‘காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு முழு வெற்றி கிடைக்கவே எதிர்க்கட்சித் தலைவர் திருத்தம் கோரினார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகே திருத்தத்தை முன்மொழிந்தார்’ எனவும் எ.வ.வேலு தெரிவித்தார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் குறித்து சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

திருத்தம் கொடுக்கும் போது உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. காவிரி பிரச்னை பல்வேறு வகையில் சட்டப்போராட்டம் நடத்தியிருக்கிறோம். தவெகவுக்கு இந்த விவகாரத்தில் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்ற உணர்வோடு தான் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி திருத்தம் கொண்டு வந்தால் தான் மேகதாது அணையை கட்டுவதை நிறுத்த முடியும் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இந்த திருத்தம் கொண்டு வந்தார்.

திமுக தலைவர் சொன்னதைப் போல அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகளை பேரவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். முதலமைச்சர் விஜய்க்கு திமுக உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து எனவும் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: