அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தடுப்பூசி “அகலசியாகார்டியா” அரியவகை நோயை குணப்படுத்திய திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்

திருச்சி, மார்ச் 9: வாந்தி மற்றும் குமட்டலினால் ஆறு மாத காலமாக தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருந்த 57 வயதுடைய செல்லதுரை என்பவர் திருச்சி அப்போலோ மருத்துவமனை குடல் மற்றும் வயிற்று சிறப்பு மருத்துவர் எஸ்.என்.கே. செந்தூரனை அனுகினார். மருத்துவர் நோயாளியை பரிசோதித்ததில், பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடிய “அகலசியாகார்டியா” எனப்படும் அரியவகை நோய் உள்ளதை கண்டறிந்தார்.இப்பிரச்னைக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை அல்லது லேபராஸ்கோபி மூலமாகவே தீர்வு என்ற நிலைமாறி, தற்பொழுது எண்டோஸ்கோப்பி மூலம் அதிநவீன POEM(perOral Endoscopic Myotomy) என்ற புதிய சிகிச்சையை, இந்தியாவிலேயே மிக குறைந்த மருத்துவர்களே அளிக்கின்றனர்.

இச்கிச்சை அளிக்க மிகவும் குறைந்த சிறப்பு மருத்துவ நிபுணர்களே நாட்டில் உள்ள நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த குடல், கல்லீரல் மற்றும் வயிறு சிறப்பு மருத்துவர் செந்தூரன், மயக்கவியல் மருத்துவநிபுணர் டாக்டர் .கார்த்திக் உதவியுடன் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக இச்சிகிச்சையை வெற்றிகரமாக அளித்தார்., இச்கிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினர்களுக்கு அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல தலைமை மருத்துவர் ரோகினிதர் பாராட்டு தெரிவித்தார். திருச்சி அப்போலோ மருத்துவமனை முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல், விற்பனைப்பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம் மற்றும் துணைப் பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.

Related Stories: