அழகப்பா பல்கலையில் யோகா தினம் கொண்டாட்டம்

 

காரைக்குடி, ஜூன் 22: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா கல்வி மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 12வது சர்வதேச யோகா தின கொண்டாடப்பட்டது. ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளை மையப்படுத்தி பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நடராஜன் வரவேற்றார். பேராசிரியர் முனைவர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், நமது நாடு உலகிற்கு வழங்கிய மிகப் பெரிய கொடை யோகா கலை. யோகா குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த இந்த சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமரின் சர்வதேச யோகா தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல வாழ்க்கை முறை அடையாளம் தினசரி யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: