லாரிகளின் பின்பகுதியில் மறைத்து வைத்து இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு: இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த இந்தியர் ஜஸ்கிரத் சிங்(25). இவருக்கு ஆள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக இங்கிலாந்து நாட்டின் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் டோவர் பகுதியில் லாரி ஒன்றில் பதுங்கியிருந்த 11 இந்தியர்களை கண்டுபிடித்தனர். அதேபோல் கடந்த 2025ம ஆண்டு ஜனவரியில் பிரான்சுக்கு சென்ற மற்றொரு லாரியில் 4 இந்தியர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜஸ்கிரத் சிங் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஜஸ்கிரத் சிங், கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் 2026 மார்ச்சுக்கு இடைப்பட்ட காலம் வரை, பிரிட்டிஷ் குடியுரிமை பெறாதவர்களை சட்டவிரோதமாக லாரிகளில் மறைத்து, அழைத்து சென்றுள்ளார். இத்தகைய ஆள் கடத்தல் சம்பவங்களுக்காக லாரி ஓட்டுநர்களை ஒருங்கிணைத்தல், கட்டணங்களை பெறுதல் உள்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆள் கடத்தல் வழக்கில் ஜஸ்கிரத் சிங்குக்கு 5 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கேன்ட்ர்பரி கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ” என்றனர்.

Related Stories: