ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30). இவரது மனைவி ராஜாத்தி. இவர்களது மகள் மேனகா (8). ஏற்காடு முண்டகம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். வாழவந்தியில் இருந்து பள்ளிக்கு நேற்று காலை 8 மணியளவில் தனியார் வேனில் மேனகா ஏறிச்சென்றார். ஏற்காடு கே.புத்தூரை சேர்ந்த ரங்கநாதன் (42) ஓட்டிச் சென்றார்.
காலை 8.30 மணியளவில் லேடீஸ் சீட் பகுதிக்கு வேன் சென்றதும், அனைத்து மாணவ, மாணவிகளும் கீழே இறங்கி, முன்னால் நின்றிருந்த மற்றொரு வேனில் ஏறினர். மேனகாவும் இறங்கி முன்புறம் சென்றார். திடீரென அந்த வேனை டிரைவர் ரங்கநாதன் எடுக்கவே முன்புற சக்கரத்தில் மேனகா சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.
