கோவை: கோவை, சரவணம்பட்டியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கதிர்வேல். இவரது மனைவியும் கணபதி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சரவணம்பட்டியை சேர்ந்த தீபன் என்பவர் தனது தொழிற்சாலையில் 60 கிலோ வாட் பேனல் அமைக்க நெட் மீட்டர் பொருத்த வேண்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அதை ஆய்வு செய்த உதவி செயற்பொறியாளர் கதிர்வேல் ஒரு கிலோ வாட் பேனலுக்கு ரூ.1500 வீதம், 60 கிலோ வாட் பேனலுக்கு ரூ.90 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி தீபன், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை நேற்று மதியம் தீபன், உதவி செயற்பொறியாளர் கதிர்வேலிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கதிர்வேலை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
