2,000 தொழிலாளர்கள் இன்று குடும்பத்துடன் போராட முடிவு நண்பர் வீட்டுக்கு க.காதலியுடன் சென்றவர் மயங்கி விழுந்து திடீர் சாவு

திருச்சி, மார்ச் 8: திருச்சி உறையூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(60). தென்னூர் பகுதியில் பேன்சி ஸ்டோர், பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மாரிமுத்துவின் நண்பர் தென்னூர் மல்லிகைபுரத்தை சேர்ந்த குணசேகரன்(54). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக உள்ளார். இவர் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து கோட்டை சுண்ணாம்புகார தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து சுண்ணாம்புக்கார தெருவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதியினர் இது குறித்து கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாரிமுத்துவுக்கும், தென்னூர் மல்லிகைபுரத்தை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கள்ளக்காதலியை அழைத்து வந்த மாரிமுத்து, அவருடன் தனிமையில் இருக்க வீடு தேடியுள்ளார். அப்போது நண்பர் குணசேகரனுக்கு போன் செய்து கூறியதால், தனது வீட்டுக்கு வரும்படி அவர் அழைத்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலியுடன் மாரிமுத்து சுண்ணாம்புக்கார ெதருவில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டருகே ெசன்றபோது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மாரிமுத்து மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலி அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்துவின் கள்ளக்காதலி மற்றும் நண்பரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>