தேர்தல் விதி மீறி நகை கடன் விவசாயிகள்ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச்8: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் விதிமுறை மீறி குறிப்பிட்ட விவசாயிகளுக்கு முன்தேதியிட்டு நகை கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வருவதை அறிந்த ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து சங்கம் முன்பு விவசாயிகள் வங்கி அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ஜெகதீசன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் அளித்த புகார் மனுவை பெற்று மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.  இதுகுறித்து விவசாயிகள் கலெக்டர், கூட்டுறவு சங்க மாவட்ட இணை பதிவாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>