பொன்னமராவதி அருகே வலையபட்டி காட்டேரிவீரன் சுவாமிக்கு துறை பொங்கல் விழா

பொன்னமராவதி, மார்ச் 8: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி கழுதைபுரளி குளத்தில் சலவைத்தொழிலாளர்கள் சார்பில் துறைப்பொங்கல் விழா நடந்தது. பொன்.வலையபட்டி கழுதை புரளி குளத்தில் காட்டேரிவீரன் சுவாமிக்கு துறைப்பொங்கல் விழா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக வலையபட்டி மலையாண்டி கோயிலில் உள்ள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து பொங்கல் கூடைகளை எடுத்து ஊர்வலமாகச் சென்று கழுதை புரளிக்குளத்தில் உள்ள காட்டேரிவீரன் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

Related Stories: