பாலியல் சீண்டலுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

தொண்டி, ஜூன் 18: பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பு உறுதி படுத்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவிகள், சிறுமிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது தொடர்கதையாகி விட்டது. இதனால் உயிர் இழப்புகளும் நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக போதிய கண்காணிப்பு இல்லாததே காரணம். பள்ளி கூடம் மற்றும் பணிபுரியும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சிறுமிகள், பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளிடம் நல்லதொடுதல், கெட்ட தொடுதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இது குறித்து சமூக ஆர்வலர் ஜிப்ரி கூறியது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவோரை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும். மேலும் பெண்கள் பணிபுரியும் இடங்கள் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றார்.

Related Stories: