மண்டபம், ஜூன் 18: மண்டபம் அருகே வேனில் கொண்டு வரப்பட்ட 150 புறாக்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வாகன ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் பகுதிக்கு வாகனத்தில் கடத்தல் பொருள்கள் கடத்தி வருவதாக மண்டபம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் மண்டபம், வேதாளை ஆகிய பகுதியில் சாலையில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது வேதாளை அருகே குச்சார்வலசை சோதனை சாவடியில் வேனில் 150 புறாக்கள் இருப்பது தெரிய வந்தது. இதை அறிந்த போலீசார் புறாக்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த புறாக்கள் எதற்காக வேனில் கொண்டு வரப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காகவா என வேனின் டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
