வணிகர்கள் சங்க கூட்டம்

 

பென்னாகரம், ஜூன் 18: பென்னாகரம் அருகே ஏரியூரில் சுமார் 400 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. ஆனால், இதுவரை இந்த வணிகர்களுக்கான சங்கம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், வர்த்தகர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் வணிகர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முறைப்படி வணிகர் சங்கம் தொடங்கி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஏரியூர் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களையும் உறுப்பினராக இணைத்து, உரிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமித்து முறைப்படி பதிவு செய்து, சங்கத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: