×

உருகுவே-சவுதி போட்டியும் டிரா

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் எச் பிரிவில் உருகுவே-சவுதி அரேபியா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 41 நிமிடத்தில் உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா செய்த பிழையைப் பயன்படுத்தி, சவுதி அரேபிய தடுப்பாட்ட வீரர் அப்துல்லா அலஅம்ரி கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச்செய்தார். 2வது பாதியில் பதில் கோல் அடிக்க உருகுவே வேகத்தை அதிகரித்தது. அதற்கு பலனாக 80வது நிமிடத்தில் சவுதி அரேபியா கோல் கீப்பர் முகமது ஓவைஸ் செய்த தவறை பயன்படுத்தி உருகுவே வீரர் மாக்ஸி அரவுஜோ கோல் அடித்து சமன் செய்தார். அதன்பின்னர் கோல் எதுவும் விழாததால் 1-1 என போட்டி சமனில் முடிந்து தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

Tags : Uruguay ,Saudi ,Miami ,Saudi Arabia ,Miami Stadium ,United States ,Fernando ,
× RELATED ஸ்பெயின் அணியை கோல் போட விடாமல் தண்ணி...