சியாட்: அமெரிக்காவின் சியாட்டில் நடந்த போட்டியில் குருப் ஜி பிரிவில் பெல்ஜியம்-எகிப்து ஆதிக்கம் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் எகிப்து ஆதிக்கம் செலுத்தியது. 19வது நிமிடத்தில் அந்த அணிகாள் முன்கள் வீரர் சலாஹ் வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி எமாம் அஷெளர் கோல் அடித்தார். எகிப்து அணியின் பலத்த தற்காப்பு ஆட்டத்தால், முதல் பாதியில் பெல்ஜியம் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பாதியில் 1-0 என எகிப்து முன்னிலை பெற்றது.
2வது பாதியில் பெல்ஜியம் வீரர்களை அடுத்தடுத்து பயிற்சியாளர் மாற்றி களம் இறக்கினார். 66வது நிமிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தால், எகிப்து அணியின் டிபென்டர் முகமது ஹானி எதிர்பாரதவிதமாக சேம்சைடு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 சமநிலையை எட்டியது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றும் பலன் கிடைக்காததால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா புள்ளிகள் கிடைத்தது.
