×

23 கோல் முயற்சியும் போச்சு… ஸ்பெயினை தண்ணி குடிக்க வைத்த குட்டி தீவின் 40 வயது கோல் கீப்பர்

அட்லாண்டா: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எச் பிரிவில் உள்ள முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், அறிமுக அணி கேப் வெர்டே ஆகிய அணிகள் அட்லாண்டா மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகள் அனைத்தையும் கேப் வெர்டே தடுத்து நிறுத்தியது. ஸ்பெயின் அணி பந்தை 62% நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, 23 கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இறுதிவரை கோல் எதுவும் அடிக்கப்படாததால் 0-0 என போட்டி டிராவில் முடிந்தது. கேப் வெர்டே அணியின் 40 வயது மூத்த கோல்கீப்பர் வோசின்ஹா அசாத்தியமாக செயல்பட்டு 7 முக்கிய கோல் முயற்சிகளை தடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். சுமார் 5.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய தீவு நாடான கேப் வெர்டே, தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே உலகத்தரம் வாய்ந்த ஸ்பெயின் அணியுடன் டிரா செய்து அசத்தி உள்ளது.

Tags : Spain ,Atlanta ,Cape Verde ,FIFA World Cup football ,Atlanta stadium ,
× RELATED ஸ்பெயின் அணியை கோல் போட விடாமல் தண்ணி...