டெக்சாஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் எப் பிரிவு லீக் ஆட்டம் டெக்சாஸ் நகரில் நடந்தது. இதில் நெதர்லாந்தும், ஜப்பான் அணியும் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் ஆட்டம் முற்றிலும் சூடுபிடித்தது.
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் விர்ஜில் வான் டைக் தலையால் முட்டி ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். சர்வதேச அரங்கில் வான் டைக் அடிக்கும் முதல் முக்கிய கோல் இதுவாகும்.ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஜப்பானின் கெய்டோ நகமுரா பந்தை லாவகமாக கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். தகேபுசா குபோ கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார்.
இதன்பின் நெதர்லாந்து அணி 64வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்தது. கிறிசென்சியோ சம்மர்வில் மைதானத்திற்கு வெளியிலிருந்து இடது காலால் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் கோல் போஸ்ட்டிற்குள் சென்றது. இதனால் நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இதனால் நெதர்லாந்து எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தை டிரா செய்ய ஜப்பான் பயிற்சியாளர் ஹாஜிமே மோரியாசு அதிரடியாக மாற்று வீரர்களைக் களம் இறக்கினார்.
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜப்பானுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கோகி ஒகாவா தலையால் முட்டிய பந்தை நெதர்லாந்து கோல்கீப்பர் தற்காக்க முயன்ற போதும், அருகில் நின்ற டெய்ச்சி காமடா அதை கோலாக மாற்றினார். அதன் பின்னர் கோல் அடிக்காததால் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.
