- ஈரான்
- நியூசிலாந்து
- ஐக்கிய மாநிலங்கள்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- குழு ஜி லீக்
- சாபி ஸ்டேடியம்
- லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
- எலியா ஜஸ்ட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சேபி மைதானத்தில் நடந்த குரூப் ஜி லீக் ஆட்டத்தில் ஈரான்-நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் கோல் அடித்தார். இதனால், 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகித்த நிலையில், 32வது நிமிடத்தில் ஈரானின் ரமின் ரெசையான் ஒரு கோல் அடிக்க 1-1 என சமன் ஆனது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் மீண்டும் எலிஜா ஜஸ்ட் ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் (64வது நிமிடம்) ஈரானின் முகமது மொஹெபி கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதை கொண்டாடும் விதமாக மொஜெபி, பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்க முயாமல் போகவே ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நீண்ட இழுபறிகக்கு பின் முடிவுக்கு வரும் தருவாயில் அமெரிக்காவில் ஈரான் அணி ஆடிய இந்த ஆட்டம் சற்று பதற்றத்துடனேயே பார்க்கப்பட்டது. ஈரானிய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதி லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகும். இதனால், மைதானத்திற்கு வந்திருந்த ஈரான் அணி ரசிகர்களுடன் மற்றவர்கள் பிரச்னை செய்யக்கூடும் என அச்சம் நிலவியது. மைதானத்திற்கு வெளியே ஈரான் எதிர்ப்பாளர்கள் சுமார் 500 பேர் வரை திரண்டு ஈரான் அரசுக்கு எதிரான பேனர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில், திங்கள்கிழமை இரவு நியூசிலாந்து அணியுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலை கண்ட சில மணிநேரங்களிலேயே, அமெரிக்காவை விட்டு வெளியேறி மெக்சிகோவில் உள்ள தங்கள் பயிற்சி முகாமுக்குத் திரும்புமாறு ஈரான் உலகக் கோப்பை அணிக்கு உத்தரவிடப்பட்டதாக அதன் பயிற்சியாளர் தெரிவித்தார்.
திட்டமிட்டதை விட முன்னதாகவே வெளியேறுமாறு ஈரான் அணிக்கு உத்தரவிட்டது யார் என்பதை பயிற்சியாளர் அமீர் காலினோயி குறிப்பிடவில்லை. முதல் போட்டிக்குப் பிறகு உடல் சோர்வு நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் கலிபோர்னியாவில் இரவு தங்க அந்த அணி திட்டமிட்டிருந்தது; ஆனால், போட்டி முடிந்த பிறகு, 140 மைல் தொலைவில் உள்ள டிஜுவானாவுக்குத் திரும்ப அனைவரும் உடனடியாக விமானத்தில் ஏற வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
