×

உமருக்கு கை கொடுத்த பிபா

மொகடிஷூ: உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 52 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவருக்கான விருதை வென்ற சோமாலியாவைச் சேர்ந்த உமர் ஆர்டனும் ஒருவர். சோமாலியாவிலிருந்து உலகக் கோப்பையில் பணியாற்றப்போகும் முதல் நடுவர் என்ற பெருமையை பெறுவதற்காக உமர், அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் சென்றடைந்தார். ஆனால் அதிபர் டிரம்ப், சோமாலியர்கள் அமெரிக்கா வர விதித்துள்ள கெடுபிடி உத்தரவுகளால் உமர் அமெரிக்காவுக்குள் நுழைய குடியுரிமைத் துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் சோகத்துடன் சோமாலியா தலைநகர் மொகடிஷூ விமான நிலையத்திற்கு திரும்பிய உமருக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் கடவுள் ஆசீர்வதித்தால் நிச்சயம் அடுத்த உலகக் கோப்பையில் பங்கேற்பேன் என்றார். இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க முடியாவிட்டாலும் அவரது திறமையை போற்றும் வகையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழு தொகையையும் வழங்குவதாக பிபா உறுதியளித்துள்ளது. அதோடு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள யூஇஎப்ஏ சூப்பர் கோப்பை தொடருக்கு அவரை நடுவராக நியமனம் செய்வதாகவும் பிபா அறிவித்துள்ளது.

Tags : Biba ,Umar ,MOKTISHU ,WORLD CUP FOOTBALL MATCH ,Umar Ardan ,Somalia ,Africa ,World Cup ,
× RELATED நெதர்லாந்து- ஜப்பான் போட்டி 2-2 என டிரா