திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் சரியாக ஒரு மணிக்கு குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மோப்ப நாய் தென்றல் உதவியுடன் போலீசார் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
