மலை காய்கறி விவசாயம் பாதிப்பு

மஞ்சூர், மார்ச் 8:நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளிகூர், பிக்கட்டி, சிவசக்திநகர், லாரன்ஸ், எமரால்டு, அண்ணாநகர், இந்திராநகர், இத்தலார், நஞ்சநாடு, பேலிதளா, முத்தொரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் மலை காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக மழை பெய்யாததாலும், பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சியின் தாக்கத்தால் காய்கறி தோட்டங்கள் ஈரத்தன்மை இழந்து பயிர் செடிகள் வாடி வருகின்றன. இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் பம்ப்செட்டுகள் மற்றும் ஸ்பிரிங்ளர், ரப்பர் குழாய்கள் மூலம் தண்ணீரை இறைத்து பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>