மொடக்குறிச்சி தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

மொடக்குறிச்சி, மார்ச் 8: மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷ் ஆகியோர் வழங்கினர். இப்பயிற்சியில், ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக விநியோகிக்கப்பட வேண்டிய பொருட்கள், நியமண ஆணைகள், கொரோனா தொற்று பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் ஆகியவற்றை முறையாக அதிகாரிகளிடமிருந்து பெற்று கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்படும் கன்ட்ரோல் யூனிட், யூனிட்ஸ், விவி பேட் ஆகிய கருவிகளை, வரிசை எண்ணை கவனமாக சரி பார்த்து உறுதிபடுத்திய பின்னரே, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு வழங்கவேண்டும். அனைத்து வாக்குச்ாவடிகளிலும் உரிய நேரத்தில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு துவங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்து ஈ.வி.எம். இயந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா?, என்பதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்ற ஈ.வி.எம்.மிஷின் பழுதடைந்து விட்டால், உடனே அதிகாரிகளுக்கு தெரிவித்து, உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு பயிற்சியை மண்டல அலுவலர்களுக்கு வழங்கினர்.

Related Stories: