ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுரங்க நடைபாதை அமைக்க கோரிக்கை

திருச்சி, மார்ச் 7: ஜனநாயக ஐக்கிய முறை ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் அப்துல்ரஹீம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தலைமை தபால்நிலையம், காந்தி சிலை, கன்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, வில்லியம்ஸ் சாலை, நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். காஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக யாருக்கு ஜனநாயக ஐக்கிய முறை ஜமாத் யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>