ஊட்டி, ஜூன் 13: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலையோரங்களில் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. குறிப்பாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டிங்கிள் டேல் பகுதிக்கு செல்லும் சாலையோரங்களில் இரு புறங்களிம் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் இந்த புதர்களில் காட்டு மாடுகள், கரடிகள் மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் பதுங்கியிருப்பது தெரிவதில்லை. இரவில் வரும் போது சில சமயங்களில் இந்த புதர்களில் மறைந்திருக்கும் காட்டு மாடுகள் பொதுமக்களை விரட்டுகின்றன. மாலை 6 மணிக்கு மேல் இச்சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இச்சாலையோரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
