கழிவு நீரால் நோய் தொற்றும் அபாயம்

ஊட்டி, ஜூன் 13: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட குருசடி காலனி செல்லும் சாலையோரத்தில் நகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி சார்பில் குப்பைகளை முறையாக வந்து சேகரிக்காத நிலையில் பெரும்பாலான மக்கள் இந்த குப்பைத் தொட்டிகளில் குப்பைகளையும், உணவு கழிவுகளையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், குப்பை தொட்டியில் இருந்து கழிவு நீர் சாலையில் ஓடுகிறது.

மேலும், கால்நடைகள் மற்றும் குதிரை போன்றவைகள் குப்பைகளை இழுத்து சாலையில் போட்டு விடுகின்றன. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: