சத்தியமங்கலம், ஜூன் 4: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நேற்று பட்டப்பகலில் பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நடமாடின. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டால் யானைகள் ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் இரவு நேரத்தில் விரட்டி அடிக்க திட்டமிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே பவானிசாகர் அணையின் கரைப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வோர் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பவானிசாகர் அணை பூங்கா அருகே உலா வந்த 4 காட்டு யானைகள்
- பவானி சாகர் அணை பார்க்
- சத்தியமங்கலம்
- சத்யமங்கலம் புலி ரிசர்வ் காடு
- பவானி சாகர் காடு
- பவானி சாகர்
- பவானி சாகர் அணை
