கான்கிரீட் தூண் விழுந்து தொழிலாளி பலி

 

பாலக்காடு, ஜூன் 9: பாலக்காடு ஆலத்தூர் அருகே உள்ளது குழல்மந்தம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (43). இவர் உள்பட 3 பேரும் இங்குள்ள தனியார் கிணற்றில் தூர்வாரினர். நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி சேரும், சகதிகளையும் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்த கான்கிரீட் தூண் இடிந்து கிணற்றில் இருந்தராமதாஸ் தலையின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழல்மந்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: