×

ஆந்திராவில் மோசடி ரூ.200 கோடி இருப்பதாக ஏமாற்றி 18 பெண்களை வீழ்த்திய வாலிபர்

திருமலை: ரூ.200 கோடி சொத்து இருப்பதாக பதிவிட்டு திருமண ஆசைக்காட்டி 18 பெண்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உன்றஜாவாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகாமேஷ் (28). இவர் கடந்த சில ஆண்டுகளாக திருமண வெப்சைட்டில் தனக்கு மணமகள் வேண்டும் என விண்ணப்பித்தார்.

அதில் தனது புகைப்படத்தை இணைத்து தனக்கு ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது என்று போலி ஆவணங்களை காண்பித்து விளம்பரம் செய்தாராம். இதனை நம்பி ஐடி உட்பட பல துறைகளை சேர்ந்த பெண்கள் போட்டிப்போட்டு தொடர்பு கொண்டுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடகாமேஷ், அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி நெருங்கி பழகினார்.

பின்னர் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பல லட்ச ரூபாய் வரை ஏமாற்றி வந்துள்ளார். அதன்பின்னர் தனது செல்போன் எண்களை மாற்றி வந்தார். இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களில் மொத்தம் 18 இளம்பெண்கள் வரை ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Andhra ,Thirumalai ,Venkatakamesh ,Unrajawaram ,West Godavari district ,AP ,
× RELATED கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு...