புதுடெல்லி: இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த விமானங்களில், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து வதோதராவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 விமானத்தின் வெற்றிகரமான முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனால் இந்த பரிசோதனை முழு குழுவினருக்கும் இந்திய விமானப்படை வாழ்த்து தெரிவித்தது.
