×

பஸ்களில் ஆண்களையும் இலவசமாக அனுமதிக்காவிட்டால் போராட்டம்: கேரள ஆண்கள் சங்கம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளத்தில் வரும் 15ம் தேதி முதல் அரசு போக்குவரத்து கழகத்தின் சாதாரண பஸ்களில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரள ஆண்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறியது: அரசு பஸ்களில் தகுதியான பெண்களுக்கு மட்டுமே இலவச பயணம் அனுமதிக்க வேண்டும்.

1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் எதற்காக இலவச பயணம் அனுமதிக்க வேண்டும்? ஆண்களாக பிறந்ததால் எங்கும் நீதி கிடைப்ப தில்லை. பஸ்களில் ஆண்களுக்கு தனி இருக்கை கூட கிடையாது. எங்களிடம் மட்டும் ஏன் அரசு இப்படி ஓரவஞ்சனை காட்டுகிறது என புரியவில்லை. இந்தத் திட்டம் தொடங்கும் ஜூன் 15ம் தேதி ஆண்கள் சங்கத்தின் சார்பில் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kerala Men's Association ,Thiruvananthapuram ,State Transport Corporation ,Kerala ,
× RELATED கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு...