கேரளாவை சேர்ந்த 2 பேர் மாயம்

கோவை, மார்ச் 7: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி மனைவி கவுசல்யா (50). இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் காணவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது குறித்து அவரின் உறவினர்கள் மாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் அவரை குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

கோழிக்கோடு மாவூர் அடுவாட் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் நாயர் (72). இவரை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை. மாவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் குறித்த எந்தவிதமாக துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அவரின் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி தேடி வருகின்றனர். இருவரும் கோவையில் மாயமாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>