திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்களுக்காக 35 மகளிர் வாக்குச்சாவடிகள்

திண்டுக்கல், மார்ச் 7: திண்டுக்கல்லில் பெண் வாக்காளர்களுக்காக பெண்களே பணிபுரியும் 35 வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த கலெக்டர் விஜயலட்சுமி கூறுகையில், திண்டுக்கல்லில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகள் செய்வது, மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சாய்வு நடைமேடை உட்பட பல்வேறு வசதிகளை செய்துகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், பெண் வாக்காளர்களுக்காக பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட உள்ளன. அதன்படி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 மகளிர் வாக்குச்சாவடிகள் வீதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கும் 35 மகளிர் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன என தெரிவித்தார். ஆய்வின் போது, திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை பொறியாளர் மாரியப்பன், தேர்தல் தாசில்தார் சரவணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: