பெங்களூரு: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தனது சொந்த தொகுதியான கனகபுராவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு நடந்த பாராட்டு விழாவில் டி.கே.சிவகுமாருக்கு கிரேன் உதவியுடன் பிரமாண்டமான ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. அதில் 2 ஆப்பிள்களைக் கடித்த டி.கே.சிவகுமார், 2 ஆப்பிளின் மீதியையும் ஒன்றன்பின் ஒன்றாக தொண்டர்களை நோக்கி வீசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதுதொடர்பாக பாஜ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களின் மீது பாதி தின்ற ஆப்பிளை வீசுவது நகைச்சுவையல்ல; இது காங்கிரஸ் மனப்பான்மையின் பிரதிபலிப்பு. மரியாதை என்பது வார்த்தைகளால் காட்டப்படுவதில்லை, அது நடத்தையால் காட்டப்பட வேண்டியது. மக்கள் யாசிப்பதில்லை, அவர்கள் மரியாதையை விரும்புகிறார்கள். மதிப்புமிக்க பதவிகளில் இருப்பவர்கள் ஆணவமாக நடந்து கொள்ளும்போது, மக்களும் அதேபோலவே எதிர்வினையாற்றுகிறார்கள் என்று விமர்சித்துள்ளது.
