மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா வீடு, திரிணமூல் அலுவலகத்தில் சிஐடி சோதனை நடத்தி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளை போலியாக போட்டதாக புகாரில் சிஐடி சோதனை மேற்கொண்டது. திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி அலுவலகத்திலும் சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூன்று முறை சம்மன் அனுப்பியும் அபிஷேக் ஆஜராகாத நிலையில் குற்றப் புலனாய்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
