சாயல்குடி, ஜூன் 9: சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குருசாமி வரவேற்றார். அமேஷ் சார்லஸ் ஜெபராஜ் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 82 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனுவேல், சுசிலா மனுவேல் தியாகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்
வர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
