துரை வைகோ எம்பி மானாமதுரை வருகை

 

மானாமதுரை, ஜூன் 9: சிவகங்கை மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு கழக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் மானாமதுரை வருகை தர உள்ளனர். முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு ஜூன் 10ம் தேதி(நாளை)காலை பத்து மணியளவில் மானாமதுரை அண்ணா சிலை அருகில் சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்நிகழ்வில் தலைமை கழக, மாநில, மாவட்ட, ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: