முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பை வென்று அசத்தல்: பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று; மிரா ஆண்ட்ரீவா நெகிழ்ச்சி

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், 8ம் ரேங்க்கில் உள்ள ரஷ்யாவின் 19 வயதான மிரா ஆண்ட்ரீவா, 6-3,6-2 என்ற செட் கணக்கில், 113வது ரேங்கில் உள்ள 24 வயதான போலந்தின் மாஜா சவாலின்ஸ்காவை வீழ்த்தி பட்டம் வென்றார். ஆண்ட்ரீவாவுக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். மேலும் மரியா ஷரபோவாவுக்கு (2014) பின்னர் பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அவருக்கு கோப்பையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகள் மற்றும் 31 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. மாஜா சவாலின்ஸ்கா ரூ.15.41 கோடி பெற்றார்.

வெற்றிக்கு பின் மிரா ஆண்ட்ரீவா அளித்த பேட்டியில், `நான் மிக மிகச் சிறு வயதிலிருந்தே, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன். இந்தத் தொடரை வெல்வது, எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும், மேலும் நான் இப்போது இந்தக் கோப்பையைக் கையில் வைத்திருக்கிறேன் என்பதை என்னால் உண்மையாகவே நம்ப முடியவில்லை,’ என்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபல்லோஸ், ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் ஜோடி 7(7)-6(4), 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சிமோன் பொலெல்லி, ஆண்ட்ரியா வவஸ்ஸோரி ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

19 வயதில் சாதனை
1992ம் ஆண்டில் 18வது வயதில் மகுடம் சூடிய மோனிகா செலெஸிற்குப் பிறகு, பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற இளம் வயது (19) வீராங்கனை என்ற அந்தஸ்தை மிரா ஆண்ட்ரீவா பெற்றுள்ளார். 2005ம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த வீரர் அல்லது வீராங்கனைகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் நபர் என் பெருமையையும் பெற்றார். 15 வயதிலிருந்தே டென்னிஸ் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவர், இன்று உலகின் முன்னணி வீராங்கனையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இறுதிப்போட்டியில் தோற்ற போலந்தின் மியா ஸ்வாலின்ஸ்கா தகுதிச் சுற்றிலிருந்து இறுதிப் போட்டி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற ஓபன் எரா கால சாதனையை அவர் படைத்தார். உலகத் தரவரிசையில் 114-வது இடத்திலிருந்து தற்போது 21-வது இடத்திற்கு அவர் முன்னேற உள்ளார்.

Related Stories: