மகளிர் உலககோப்பை செஸ்: ஜாலியாய் வென்ற வைஷாலி; தம்பியை தொடர்ந்து அக்காவும் சாதனை

டோக்கியா: மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஜப்பானின் டோக்கியோவில் டபிள்யூஆர் மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் வைஷாலி ஐரின் சுகந்தர், அலெக்சாண்ட்ரா கோஸ்டினுகை வென்று கஜகஸ்தானின் அலுவா நார்மனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் துவக்கத்திலிருந்தே சிறப்பான நகர்த்தல்களை வெளிப்படுத்திய வைஷாலி 2 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். சமீபத்தில் நார்வேயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவரது தம்பி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது வைஷாலியும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: