ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பைக்கில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த மாடசாமி, அவரது மகள் பஞ்சவர்ணம் மற்றும் அவரது மருமகன் புல்லாணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
