மது விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு

ஊட்டி,மார்ச்6: நீலகிரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மதுபான விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு  மாநில சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. எனவே கள்ளத்தனமாக மது பாட்டில்கள்  கடத்தப்படுவதை தடுக்கவும், மதுபான கடைகளின் தினசரி விற்பனையை  கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைத்து  உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மதுபான கடைகளில் தினசரி விற்பனையை  கண்காணிக்கவும் மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மேலாளர் (கணக்கு) கண்ணன் என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 99407 16136 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு  புகார் தொிவிக்கலாம். மேலும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை  மற்றும் கடத்தலை தடுக்க ஊட்டி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் - 94450 29724,  கோட்ட ஆய அலுவலர் நடேசன் - 98656 11512 ஆகியோரை கொண்ட பறக்கும் படை  அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி  மேற்கொண்டு கள்ள மதுபான விற்பனை, கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிப்பார்கள்.  இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் ஊட்டி தேர்தல்  கட்டுபாட்டு அறை 0423-2450035, 2450036, ஆயம் உதவி ஆணையர் 0423-2443693,  ஊட்டி கூடுதல் எஸ்பி., 0423-2223802, குன்னூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்  0423-2234211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Related Stories: