திருவனந்தபுரத்தில் இட்லி, தோசைக்கு கஞ்சா சட்னி: அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம் உருவாக்கிய ஐடி மேனேஜர்

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் அடுக்குமாடி குடியிருப் பில் கஞ்சா தோட்டம் அமைத்திருந்த ஐடி நிறுவன மேனேஜரை போலீசார் கைது செய்தனர். இவர் கஞ்சாவை பாலில் அரைத்துக் குடித்ததாகவும், இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னியாக பயன்படுத்தியதாகவும் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கேரளத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க ஆபரேஷன் தூஃபான் என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம் இருப்பதாக ஸ்ரீகாரியம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குடியிருப்பில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு 70 செடிகள் அடங்கிய ஒரு கஞ்சா தோட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்து வந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் நடத்திய விசார ணையில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்தன. விஷால் ஒன்றரை லட் சம் சம்பளம் வாங்கி வருகிறார்.இளம் வயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையான இவர், விலை கொடுத்து வாங்க விருப்பம் இல்லாமல் தன்னுடைய குடியிருப்பிலேயே கஞ்சாவை வளர்த்து வந்துள்ளார்.

தன்னுடைய சொந்த தேவைக்காகவே இவர் இதை வளர்த்து வந்தார். செடி ஓரளவு வளர்ந்து பக்குவம் அடைந்ததும் அதை பறித்து பாலில் அரைத்து குடித்து வந்துள்ளார். சில சமயங்களில் இட்லி, தோசைக்கு கஞ்சா இலைகளை அரைத்து சட்னியாக வும் பயன்படுத்தி வந்துள்ளார்.

தன்னுடைய மாநிலமான அரியானாவில் கஞ்சா வளர்ப்பது ஒரு குற்றமே கிடையாது. அதேபோலத்தான் கேரளத்திலும் கஞ்சா வளர்ப்பதை போலீசார் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற கருதி செடிகளை வளர்த்து வந்ததாக அவர் போலீசிடம் தெரிவித்தார். அனைத்து கஞ்சா செடிகளையும் கைப்பற்றிய போலீசார் விஷாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: