பீகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 3 பேர் பலி

பாட்னா: பீகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று நோயாளிகள் உயிரிழந்தனர். முசாஃபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசாத் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்வதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை 3:55 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர், மீதமுள்ள நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து 15-20 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 13 நோயாளிகளும், இருதய சிகிச்சைப் பிரிவில் மேலும் சிலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை மூன்று மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Related Stories: