காங்கயம் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகன விற்பனை கடையில் ரூ.1.30 லட்சம் திருட்டு

காங்கயம்,ஜூன்2:காங்கயம் காவல் நிலையம் அருகே டூவீலர் கன்சல்டிங் கடையில் முகமூடி கொள்ளையரகள் ரூ.1.30 லட்சம் கைவரிசை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த வெள்ளகோயில் தாசவநாய்க்கன்பட்டி, ஊஞ்சவலசை சேர்ந்தவர் அழகரசன் (41). இவர் காங்கயம்-கரூர் சாலையில் காவல் நிலையம் அருகே கடந்த 10 வருடங்களாக இருசக்கர வாகன விற்பனை(டூவீலர் கன்சல்டிங்) கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் முன்பு வழக்கம் போல் இரவு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கல்லாப்பெட்டியில் இருந்த பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர், தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதில் நள்ளிரவு 12.30 மணி அளவில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கல்லாப்பெட்டியை திறந்து அதில் வைத்திருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்று காட்சி பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் காங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகினறனர். காங்கயம் காவல் நிலையத்திற்கு அருகே பூட்டிய கடையில் மர்ம நபர் கைவரிசை காட்டிய சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: