புதுடெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகள் ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளன. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி கூட்டம் சரிவர நடைபெறவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் கூடி ஆலோசனை நடத்துவது வழக்கம். தற்போது 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்த உள்ளன.
காங்கிரஸ் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா (யு.பி.டி), இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 15 கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி திடீரென தவெக பக்கம் தாவியதால் இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதையபிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
