வயிற்று வலியால் அவதி: பெண் தற்கொலை

கரூர், மார்ச் 5: கரூர் வாங்கல் அருகே தீராத வயிற்று வலி பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (56). இவர், கடந்த ஓராண்டாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்றுமுன்தினம் வீட்டில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு மயங்கினார்.ஆபத்தான நிலையில் அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர், மார்ச் 5: லாலாப்பேட்டை அருகே தனியார் பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தி இருந்த மூன்று பள்ளி வாகனங்களில் ஒரு வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்த வாகனங்களுக்கு தீ பரவியதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் ஒரு வேன் மட்டும் முற்றியில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>