பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது தடுக்க ஏஐடியுசி கோரிக்கை

விருதுநகர், மார்ச் 5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஏஐடியுசி தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சமுத்திரம் தலைமையில் மனு அளித்து கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு ஆலைகளை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது. பட்டாசு ஆலைகளில் நடக்கும் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.விபத்தில்லா பட்டாசு தொழிலை உருவாக்க பட்டாசு ஆலைகளை லீசுக்கு விடுவதை தடை செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகளை லீசுக்கு எடுத்தவர்கள் ஒவ்வொரு ரூமையும் லீசுக்கு விட்டு பணம் பார்க்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலில் தற்போதுள்ள பீஸ்ரேட் கூலி முறையை ரத்து செய்து மாத சம்பள முறைக்கு மாற்ற வேண்டும்.பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தனி லைசென்ஸ், தனி தொழிற்சாலை

ஏற்படுத்த வேண்டும்.

மாதம் ஒரு முறை தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். குறைந்த பட்ச கூலி ரூ.500 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். மணிமருந்து தினசரி உற்பத்திக்கு ஏற்பட தயாரிக்க வேண்டும். ஸ்டாக் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லாத காலங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சஸ்பெண்டாகும் ஆலைகளின் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: