தவெகவினர் ஆளுங்கட்சி என்ற மமதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா? டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: தவெகவினர் ஆளுங்கட்சி என்ற மமதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல், தாம்பரம் அருகே கூலி தொழிலாளியிடம் இலவசமாக செங்கல் ஜல்லி கேட்டு தாக்குதல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இந்த 4 சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பது தான்.

இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள்தான் தவெகவில் நிறைந்திருக்கிறார்களா? அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Stories: