பெருந்துறையில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னையை தீர்த்தது அ.தி.மு.க. அரசு

ஈரோடு, மார்ச் 4: பெருந்துறையில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘‘பெருந்துறையில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னையை தீர்த்தது அ.தி.மு.க. அரசு. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தலைமை கழக பேச்சாளர் போளூர் ஜெயகோவிந்தன், குன்னூர் விஜயலட்சுமி ஆகியோர் உரையாற்றினார். கூட்டத்தில் அவைத் தலைவர் சந்திரசேகரன், சி.எம்.எஸ். துணை தலைவர் ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றிய தலைவர் சாந்திஜெயராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல், கண்ணம்மாள் ராமசாமி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>