மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

மண்ணச்சநல்லூர், மார்ச் 4: மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் காமராஜர் காலனி பகுதியில் சாலைப்பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை காரணம் காட்டி கடந்த 10 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் சில வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற நிலையில் அங்கு சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காமராஜர் காலனி பகுதியில் தார் ரோடு போடுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் முறையான தார் ரோடு இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தார் ரோடு அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>