வள்ளியூர் புறவழிச்சாலையில் தடுப்புகளால் விபத்து அபாயம்

வள்ளியூர், மார்ச் 4:  வள்ளியூர் புறவழிச்சாலையில் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதோடு விபத்து அபாயம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை, நாகர்கோவிலை இணைக்கும் முக்கியச் சாலையாக திகழும் வள்ளியூர் புறவழிச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அத்துடன் வள்ளியூரில் இருந்து அரசு மருத்துவமனை,  ஆர்.டி.ஓ. அலுவலகம், சமத்துவப்புரம், ஹவுசிங்போர்டு, சண்முகபுரம், குளத்துகுடியிருப்பு, கேசவனேரி, ராஜாபுதூர் கிராமங்களுக்கு செல்வோரும், வள்ளியூருக்கு இதர வேலைகளுக்கு     வருவோரும் இந்த 4 வழிச்சாலையை கவனத்துடன் கடக்கவேண்டி உள்ளது.

 இங்குள்ள சந்திப்பு பகுதியில் காவல் துறை சார்பில் உயரமாகவும், எதிரே வரும் வாகனங்களை காண முடியாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தடுக்க ஏதுவாக எதிர்திசையில் வாகனங்கள் வருவதை காணும் வகையில் பேரிகார்டுகளை மாற்றி அமைக்க வேண்டும். அல்லது இப்பகுதியில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: