100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டரை வயது சிறுவன் உலக சாதனை

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் சையது முகமது. இவரது இரண்டரை வயது மகன் அப்துல்பாரி. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக சையது முகமது, குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு சென்றார். அங்கு மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, அப்துல்பாரி அதிவேகமாக ஓடுவதை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து சையது முகமது, தனது மகனை ஊக்கப்படுத்தி, முறையான பயிற்சி அளித்து, ஓட்ட பந்தயத்திற்கு தயார் படுத்தினார். இதையொட்டி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில், இச்சிறுவன் 100 மீ தூரத்தை 47 விநாடிகளில் கடந்து, உலக சாதனை படைத்தான். இதற்கு முன்னதாக 100 மீட்டர் ஓட்டபபந்தயத்தில், 2 உலக சாதனை படைத்துள்ளான். இந்நிலையில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், உலக சாதனை படைந்த சிறுவன் அப்துல்பாரியை, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories:

>